வியாழன், 23 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தமிழ் மாதப் பலன்
Written By
Last Modified: திங்கள், 15 ஜூன் 2020 (13:11 IST)

மேஷம்: ஆனி மாத ராசி பலன்கள்

(அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) - கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்ரன் (வ) - தைரிய ஸ்தானத்தில் ராஹூ, புதன்(வ), சூர்யன்  -  பாக்கிய  ஸ்தானத்தில் கேது, சனி (வ) -  தொழில் ஸ்தானத்தில் குரு (வ) - லாப ஸ்தானத்தில் செவ்வாய் - விரைய ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம்  வருகின்றன.  
 
கிரகமாற்றங்கள்:
 
15-06-2020  காலை 3.14 மணிக்கு சூர்ய பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
18-06-2020 அன்று காலை 10.32 மணிக்கு செவ்வாய் பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
20-06-2020 அன்று காலை 9.39 மணிக்கு புதன் பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
04-07-2020 அன்று பகல் 11.22 மணிக்கு புதன் பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
08-07-2020 அன்று பகல் 11.13 மணிக்கு குரு பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
 
பலன்:
 
உன்னதமான வாழ்க்கையை வாழ விரும்பும் மேஷ ராசியினரே இந்த மாதம் நீண்ட நாட்களாக இழுத்து வந்த சுப பலன் உண்டாகும். எந்த ஒரு  வேலையும் மன  திருப்தியுடன் செய்வீர்கள். புத்தி சாதுரியமும், வாக்குவன்மையும் அதிகரிக்கும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். 
 
குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் உங்கள் கோபத்தை தூண்டலாம். மிகவும் கவனமாக பேசுவதும் வாக்குவாதத்தை தவிர்ப்பதும் நன்மை தரும். கணவன்,  மனைவிக்குள் திடீர் மன வருத்தம் ஏற்பட்டு நீங்கும். அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்து செல்வது நல்லது.
 
தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டும். ஆர்டர்கள் கிடைக்க அலைய வேண்டி இருக்கும். பணவரத்து இருந்தாலும்  கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. 
 
உத்தியோகத்தில் இருப்பவர்கள் செயல் திறமை மூலம் கடின பணிகளையும் எளிதாக செய்து முடிப்பார்கள். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக வாய்ப்புக்கு காத்திருந்தவர்களுக்கு மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும்.
 
அரசியல்துறையினர் வீட்டைவிட்டு வெளியில் தங்கி மக்களுக்கு பணியாற்ற வேண்டிய சூழல் உருவாகும். பணிச்சுமை அதிகரிக்கும். உடன் இருப்பவர்கள் ஒத்துழைப்பு தருவார்கள்.
 
பெண்களுக்கு நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். எதிர்ப்புகள் அகலும். பணவரத்து கூடும். மாணவர்களுக்கு ஆசிரியர்களிடம் நன்கு பழகி அவர்கள் நன் மதிப்பை பெறுவதுடன் பாடங்களில் இருக்கும் சந்தேகங்களையும் போக்கிக் கொள்வீர்கள். புத்தகங்களை  கவனமாக வைத்துக் கொள்வது நல்லது.
 
அசுபதி:
 
இந்த மாதம் முன்கோபம் வந்தாலும் அதனால் பாதிப்பு இருக்காது. பணவரத்து அதிகரிக்கும். மனோதைரியம் கூடும்.  எப்படிப்பட்ட சூழ்நிலையையும் சமாளித்து முன்னேறிவிடுவீர்கள். ஆனால் மற்றவர்களின்  சூழ்ச்சிக்கு ஆளாகாமல் கவனமாக இருப்பது அவசியம்.  வழக்கு விவகாரங்களில் சாதகமான பலன் கிடைக்கும்.
 
பரணி:
 
இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாக எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, வருமான உயர்வு ஆகியவை இருக்கும்.  சக  ஊழியர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது. 
 
கார்த்திகை:
 
இந்த மாதம் குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் கூடும். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். குடும்பத்தாருடன் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேரலாம். உறவினர்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் கூடும்.
 
பரிகாரம்: செவ்வாய் கிழமையில் முருகனுக்கு தீபம் ஏற்றி வணங்கி கந்தர் சஷ்டி கவசம் படிக்க எல்லா பிரச்சனைகளும் தீரும். காரிய வெற்றி உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய்
சந்திராஷ்டம தினங்கள்: ஜூலை 2, 3
அதிர்ஷ்ட தினங்கள்: ஜூன் 26, 27.